கடந்த ஆகஸ்டு 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஃப் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம் எங்கும் உற்சாகம் நிரம்பி வழிந்தது. சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் நடைபெற்றதையொட்டி பள்ளி வளாகம் கலகலப்பாக காணப்பட்டது. 600க்கும் அதிகமானோர் இந்த சங்கமத்தில் சங்கமித்தனர். தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பு இந்த சங்கமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி சைத்தன்யானந்த மகராஜ் அவர்களும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முருகப்பன் அவர்களும் குத்து விளக்கேற்றி இந்த சங்கமத்தை துவக்கி வைத்தனர். சேவாபாரதியின் வட தமிழக பொதுச்செயலாளர் ராம.ராஜசேகர் ஒட்டுமொத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேவாபாரதியின் மாநிலப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் கிருஷ்ண ஜெகந்நாதன், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பலர் இந்த குடும்ப சங்கமத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் ஒருவருக்கொருவர் உரையாடி மகிழ்ந்தனர். கலந்து கொம்ட அனைவருக்கும் மதியம் குமரி மாவட்ட உணவு பரிமாறப்பட்டது.
சில வரவேற்பு காட்சிகள்....
வந்தோரை வரவேற்கிறார் ஆஞ்சநேயர்
குத்துவிளக்கேற்றுகிறார் சுவாமி சைத்தன்யானந்தா
குத்துவிளக்கேற்றும் தொழிலதிபர் முருகப்பன்
No comments:
Post a Comment