Sunday, June 28, 2020

பிரதமரின் மனதில் இடம் பிடித்தவர்:

காமே கௌடா.




84 வயது. இவர் ஒரு தபஸ்வி. ஆம் 42 வருடங்களாக தனது லட்சியத்திலிருந்து சிறிதளவு கூட விலகாமல், பிரதிபலன் எதையும் எதிர் பார்க்காமல் தொண்டாற்றி வருகிறார். அப்படியென்ன தொண்டாற்றியுள்ளார் காமே கௌடா.

தனது கிராமத்தின் அருகில் இருக்கும் மலைச் சரிவுகளில் இதுவரை 16 புதிய குளங்களை வெட்டி உருவாக்கியுள்ளார். ஆம் அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையை தனியொரு மனிதனாக முன்னெடுத்து செய்து முடித்துள்ளார்.

காமே கௌடாவின் சொந்த ஊர் நமது தமிழக எல்லையைத் தொட்டுக்கொண்டி ருக்கும் மாண்டியா (கர்நாடக) மாவட்டத் தில் உள்ள தாசனதொட்டி கிராமம். சிறிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆடு மேய்ப்பதும் அதிலொன்று. இவரது கிராமத்திற்கு அருகில் உள்ளது குண்டினிபெட்டா மலை. அங்கு தனது ஆடுகளை மேய்ப்பதற்காக ஒட்டிச் செல்வார். அது பொட்டல் காடாக இருந்தது. பசுமை என்பதே சிறிது கூடக் கிடையாது. கால்நடைகள், பறவைகள் குடிக்கத் தண்ணீர் இன்றித் தவிப்பதைப் பார்த்தார். மழை காலத்தில் பெய்கின்ற மழை நீரெல்லாம் மலைச்சாரலில் தேங்கி நின்றிட இடம் இல்லாததால் கீழே சென்று விடுவதை கவனித்தார். அப்போது அவரின் மனதில் தோன்றி யது தான் கால்நடைகள், பறவைகளின் தாகம் தணிக்க குளம் வெட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என்கிற சிந்தனை.

காமே கௌடா உடனடியாக திட்டத்தை நிறைவேற்றும் வேலையைத் துவக்கி னார். தன்னிடமிருந்த 2 ஆடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் குளம் வெட்டுவதற்குத் தேவையான கருவி களை வாங்கி தனியொரு மனிதனாக வேலையைத் துவக்கினார். தினசரி காலை 5 மணி முதல் 9 மணி வரை குளம் வெட்டும் பணி. பின்னர் 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஆடு மேய்த்தல். இதற்கிடையில் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து வந்தார். முதல் குளத்தை வெட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகியது.

தனியொரு ஆளாக குளம் வெட்டத் துவங்கிய போது பலரும் இவரைப் பைத்தியக்காரன் என்றெல்லாம் கேலி செய்தனர். அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது குறிக்கோளை எட்டுவதில் முனைப்புடன் இருந்துள்ளார். தனது சொந்த செலவில் சிலரை வேலைக்கு அமர்த்தி குளம் வெட்டும் வேலையை துரிதப்படுத்தியுள்ளார். இதுவரை 16 குளங்களை அந்த மலை சரிவுகளில் வெட்டியுள்ளார். இதற்காக அரசிடமிருந்து எந்த நிதியையும் பெறவில்லை. இவரது உண்மையான தொண்டினைப் பார்த்தவர்கள் கொடுத்த நிதி உதவி, இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டபோது கிடைத்த சன்மானங் கள் போன்றவற்றைக் கொண்ட 16 குளங்களையும் வெட்டியுள்ளார். ஒவ்வொரு குளத்திற்கும் தனது பேரக் குழந்தைகளின் பெயரை சூட்டியுள்ளார்.

பொட்டல் காடாகக் கிடந்த குண்டினி பெட்டா மலைச்சாரல் இன்று வருடம் முழுவதும் பச்சைப் பசுமையாகக் காட்சி தருகிறது. மழை நீர் மேலிருந்து ஒவ்வொரு குளமாக நிரம்பி அணைத்துக் குளங்களும் மழை காலத்தில் நிரம்பி விடுகிறது. பறவைகள், கால்நடை களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து வருவதுடன் விவசாயத்திற் கும் தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.

மகத்தான பணியை செய்துள்ள காமே கௌடா சாதாரண தனது வீட்டில் வசித்து வருகிறார். மேலும் 4 குளங்களை வெட்ட வேண்டும் என்பது அவரது இலக்காகும். இந்த மாமனிதரைப் பற்றி இன்றைய மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி யில் பிரதமர் குறிப்பிட்டார்.

Sadagopan Narayanan
https://www.facebook.com/narayanan.sadagopan.75/posts/10217770504397605

தோள்சீல போடவுடல, முழங்கால் வேஸ்டி கட்ட விடல அதுனால மதம் மாறி.......

CSI  நாடார்,  RC நாடாருக்கு பொண்ணு கொடுக்கமாட்டான்...

பெந்தகோஸ்த் நாடார், RC நாடாருக்கு பொண்ணு கொடுக்க மாட்டான்...

சரி பொண்ணு கொடுக்கறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

ச்சீப்ப்பான விஷயங்கள் சொல்லட்டுமா?

ரோமன் கத்தோலிக்கனும், CSI காரனும்... பெந்தேகோஸ்த்தே  காரனை  தீண்டத்தகாதவனாக தான் பார்க்கிறான்.

CSI காரன்  RC - ஐ டூப்ளிகேட் என்கிறான்.

பெந்தேகோஸ்தே - RC, CSI காரனை டூப்ளிகேட் / கள்ள என்கிறான். சாத்தானின் சூழ்ச்சிதானாம் RC, CSI இரண்டு பேரும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.

பெந்தேகோஸ்தே, RC, CSI இவர்களுக்குள் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வு சடங்குகள், புகுமனை புகுவிழா, குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மஞ்சள் நீராட்டுவது, தொழில், வியாபாரம் துவங்குவது,
இறந்தவனை புதைக்கும் இடுகாடு, முக்கியமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் நன்மை என்று சொல்லப்படும் சாராயத்தில் முக்கி வாயில் வைக்கும் "நன்மை" எனப்படும் ஒரு ரூபா மதிப்பில்லாத "அப்பம்" கூட RC  CSI-க்கு தரமாட்டான்.
CSI - - RC க்கு தர மாட்டான்.

இந்த இரண்டு பேரும் பெந்தேகோஸ்க்கு தரமாட்டான்.

பெந்தேகோஸ்தே RCக்கும், CSI க்கும் தரமாட்டான்.

முக்கியமா பெந்தேகோஸ்தேவின் பல வசனங்களை R C, CSI க்கள் பயன்படுத்தவே மாட்டார்கள்.

மாதா, ஜோசப் போன்ற RC க்களின் நம்பிக்கையான இயேசுவின் பெற்றோர்களின் படத்தை பார்த்து விட்டால் பேயோ, பிசாசோ என அலறுவார்கள்.

R C, CSI பாதிரிகளை பெந்தேகோஸ்தேக்கள் மயிருக்கு கூட மதிக்க மாட்டார்கள்.

பெந்தேகோஸ்தேக்களை RC, CSI காரர்கள் தலிபான் தீவிரவாதிகளை வெறுப்பது போல வெறுப்பார்கள்.

RC சர்ச்சுக்கு சென்று CSIகாரன் பிரார்த்தனை செய்ய கூடாது.

CSI சர்ச்சுக்கு RC காரன் பிரார்த்தனை செய்ய கூடாது, பெந்தேகோஸ்தேகாரன் இந்த இரண்டு சர்ச்சுகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய கூடாது.

செய்தால் நரகம் நிச்சயம்.

இந்த லட்சணத்துல தோள்சீல போடவுடல, முழங்கால் வேஸ்டி கட்ட விடல அதுனால மதம் மாறிட்டோமுன்னு  கதை அடிப்பானுங்க பவுடர் டின்னுங்க !